சிரியாவின், ரக்க மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

ரக்க மாகாணத்தின் வடக்கே உள்ள சுலுக் எனும் கிராமத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த தாக்குதலுக்கு குர்திஷ் அமைப்பினர் காரணம் எனவும் துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்கட்டியுள்ளது.

சிரியா - துருக்கி எல்லையில் கடந்தவாரம் இடம்பெற்ற கார்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 14 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.