(எம்.மனோசித்ரா)

ராகம பிரதேசத்தில் வீடுகளை உடைத்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராகம பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஹிங்கஹவத்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் ராகம, பேலியகொட, கடவத்த மற்றும் கிரிபத்கொட போன்ற பிரதேசங்களில் வீடுகளை உடைத்து பல்வேறு கொள்ளை சம்பங்களில் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 22 வயதுடைய களனி மற்றும் கடவத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைகடிகராம், கைதொலைபேசி , தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் கமரா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.