ஐனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தனது தேர்தல் பிரச்சாரங்களை இன்று யாழில் ஆரம்பித்துள்ளார்.

தியாகி பொன் சிவகுமாரனின் யாழ் உரும்பிராயில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

நடைபெறவிருக்கும் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் தனது தேர்தல் விஞ்ஞானத்தில் திருகோணமலை பிரகடனமாக நேற்றையதினம் திருகோணமலையில் வைத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கமைய இன்று சிவகுமாரனின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தனது தேர்தல் பிரச்சாரத்தை யாழில் ஆரம்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் நினைவுத் தூபிக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இவ்வாறு அஞ்சலி மரியாதை செலுத்தி அவர்களை வணங்கி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கமைய யாழில் சாவகச்சேருயுல் தனது முதலாவது தேர்தல் பிரச்சாரம் கூட்டத்தையும் நடாத்தியிருந்தார்.