சுண்டிக் குளம் கடற்கரையில் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 83 கிலோ கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பொதிகள் பலவற்றை நேற்று(09) மீட்டுள்ளனர்.

குறித்த பொதிகளை சோதனையிடட போது கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை கடற்படையினர் பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.