கபாலி படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டதால் கோடை விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாட அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கபாலி படம் ஜுலை மாதம் முதல் திகதியன்று வெளியாகவிருக்கிறது. இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 2.0 படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு ஜுன் மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. அதனால் கிடைத்த இடைவெளியில் குடும்ப உறுப்பினர்களுடன் கோடை விடுமுறையை கொண்டாட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார்.

தகவல் : சென்னை தகவல்