பங்களாதேஷில் 20 இறாத்தல் நிறையுடைய இராட்சத தலையுடன் வாழும் பாலகன்.!

Published By: Robert

27 May, 2016 | 08:58 AM
image

தென் பங்­க­ளா­தேஷில் 20 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத தலை­யுடன் பாலகன் ஒருவன் வாழ்­வது தொடர்­பான தகவல் சர்­வ­தேச ஊட­கங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன.

எமொன் என அழைக்­கப்­படும் மேற்­படி 2 வயது பால­கனின் தலையின் நிறை ஒரு வயதுக் குழந்­தை­யொன்றின் சரா­சரி நிறையை ஒத்­த­தாகும். அந்தப் பாலகன் பிறந்த போது அதன் தலை சாதா­ரண குழந்­தை­களை விடவும் சிறிது பெரி­தாக மட்­டுமே இருந்­த­தா­கவும் ஆனால் கடந்த 2 வருட காலத்தில் அத­னது தலை படிப்­ப­டி­யாக பெரி­தாகி இராட்­சத உருவை அடைந்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

மூளை தண்­டு­வட திரவம் மண்­டை­யோட்டில் சேர்­வதால் ஏற்­படும் ஹைரோ­செ­பலஸ் என்ற பாதிப்பு அவ­னுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

வழ­மை­யாக மூளை­யையும் முள்­ளந்­தண்­டையும் சூழ்ந்து காணப்­படும் திரவம் அந்த உறுப்­பு­க­ளுக்கு மெத்­தை­யாக செயற்­பட்டு பாது­காப்பு அளிப்­ப­துடன் அந்த உறுப்­பு­க­ளுக்­கான போஷ­ணை­களை வழங்­குதல் மற்றும் கழி­வ­கற்றல் செயற்கி­ர­மங்­க­ளுக்கும் உறு­து­ணை­யாக இருந்து வரு­கி­றது.

மூளை­யானது தின­சரி சுமார் ஒரு பைந்து புதிய தண்­டு­வட திர­வத்தை தொடர்ச்­சி­யாக உற்­பத்தி செய்­கி­றது. அதே­ச­மயம் மூளையால் வெளி­யி­டப்­பட்ட பழைய திரவம் குருதிக் கலங்­களால் துரி­த­மாக அகத்­து­றிஞ்­சப்­ப­டு­கின்­றன. குருதிக் கலங்­களால் அந்தத் திரவம் அகத்­து­றிஞ்­சப்­ப­டு­வதில் இடை­யூறு ஏற்­படும் போது மூளை தண்டு வட திரவம் அதி­க­மாகச் சேர்ந்து மூளை மீது அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்கும். அத்­த­கைய பாதிப்பே எமொ­னுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் பாதிப்புக் கார­ண­மாக எமொனால் பேசவோ நடக்­கவோ அல்­லது அவ­ய­வங்­களை அசைக்­கவோ முடி­யா­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்கு முன் இந்­தி­யாவில் இத்­த­கைய பாதிப்­புக்­குள்­ளான ரோனா பேகம் என்ற பால­கிக்கு ஒரு தொகை அறுவைச் சிகிச்­சை­களின் மூலம் அவரது தலையின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமக்கு இந்திய புது டில்லி சென்று அத்தகைய சிகிச்சையை பெற போதிய வசதியில்லை என எமொனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right