வளிமண்டல மாசடைவினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறைந்து வருகிறது : மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவிப்பு

By R. Kalaichelvan

09 Nov, 2019 | 04:19 PM
image

(நா.தனுஜா)

நாட்டின் வளிமண்டலத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த மாசடைவு மற்றும் அதனால் உண்டான தாக்கங்கள் தற்போது குறைந்திருப்பதாகவும், வளிமண்டலத்தில் காணப்படும் சிறுதுகள்களின் அளவில் சடுதியாக ஏற்பட்ட  அதிகரிப்பு மீண்டும் குறைந்து வருவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை என்பன தெரிவித்திருக்கின்றன.

வளிமண்டலத்தில் உயர்மட்டத்தில் ஏற்படும் அதிக காற்றழுத்தத்தினாலும், வாகனப்பயன்பாட்டினால் சூழலுக்கு வெளிவிடப்படும் திரவியங்கள் மற்றும் வேறுசில காரணிகளாலும் இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டிருக்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, எனினும் இவ்வளிமண்டல மாசடைவிற்கான பிரதான காரணத்தை அடையாளங்காணுவது கடினமானது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதேவேளை இந்த அசாதாரண நிலை குறித்து உரிய நிறுவனங்களுடன் தொடர்பினைப்பேணி வருவதுடன், அவ்வப்போது மக்களைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திக் பணிப்பாளர் நாயகம் டிபிள்யூ.ஏ.தர்மசிறி கூறியிருக்கிறார்.

மேலும் இவ்வளிமண்டல மாசடைவின் காரணமாக சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் மற்றும் சுவாசநோய்களால் பாதிக்கப்பட்டிருப்போர் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியிருப்பதுடன், அமைச்சினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் தர்மசிறி கேட்டுக்கொண்டார்.

 அத்தோடு தற்போது ஏற்பட்டிருக்கும் வளிமண்டல மாசடைவைக் குறைப்பதற்கு ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பை வழங்கும் விதமாக சூழலுக்கு நேயமான விதத்தில் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39
news-image

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை...

2022-09-29 11:17:21