இளைய தலைமுறையினருக்கு பக்கவாதமும், மாரடைப்பும் ஒருசேர ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தற்போது நவீன கூட்டு சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

உலகளவில் ஆண்டுதோறும் 17 மில்லியன் மக்கள் பக்கவாத பாதிப்பிற்கு உள்ளாகுவதாகவும், இதில் ஆறு மில்லியன் மக்கள் முறையான சிகிச்சையை பெறாமல் உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இத்தகைய பாதிப்புக்குள்ளானவர்கள், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் தற்போது அறிமுகமாகியிருக்கும் கூட்டு சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நூறு சதவீத அளவில் குணமடையலாம்.

அண்மைக்காலமாக இளைய தலைமுறையினர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் பெரும்பான்மையோர் மாரடைப்பு மற்றும் பக்க வாதத்திற்கு ஒருசேர பாதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு தற்பொழுது ஒஞ்சியோபிளாஸ்டி, திரோம்பக்டமி, திரோம்போலிஸஸ் என்ற நவீன சிகிச்சைகள் மூலம் இதய ரத்த நாள அடைப்பையும்,  மூளை ரத்த நாள அடைப்பையும் சீராக்கி, அவர்களை குணப்படுத்துகிறார்கள்.