(ஆர்.விதுஷா)

மீகொட கம்பேயாஹேன பகுதியில் அமைந்துள்ள ஹேட்டலொன்றில் இடம் பெற்ற முகநூல் களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 9  யுவதிகள் உள்ளிட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  

இன்று அதிகாலை 1 மணியளவில் போதைப் பொருள் பாவனையுடன் களியாட்ட நிகழ்வு பற்றி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில 9  யுவதிகளும் 21 இளைஞர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களிடமிருந்து கேரளா கஞ்சா ,   ஹசீஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.   

சந்தேக நபர்கள் அனைவரும் போதைப்பொருள் பாவித்திருந்ததுடன், அவர்களில் ஏழு பேரிடமிருந்து 27 கிராம் கஞ்சாவும் ஒருவரிடமிருந்து 200   மில்லிகிராம் ஹசீஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த இளைஞர் யுவதிகள்  18 தொடக்கம் 25 வயதுடையவர்கள் என விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது. அதேவேளை, சந்தேக நபர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை பொலிசார் இன்று மேற்கொண்டிருந்தனர்.  

சம்பவம் தொடர்பில் மீகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு  வருகின்றனர்.