கொழும்பு மாவட்டம் குறிப்­பாக கொழும்பு தலை­நகர் பகுதி ஐக்­கிய தேசிய கட்­சியின் கோட்டை என சொல்­லப்­ப­டு­வ­துண்டு. அங்கு தான் ஐக்­கிய தேசிய கட்சி அதி­க­ள­வான வாக்கு விகி­தா­சா­ரத்தை எப்­போதும் பெற்­றுக்­கொள்ளும். அந்த சாத­னையை இந்­த­முறை நுவரெ­­லியா மாவட்டம் முறி­ய­டித்து ஐக்­கிய தேசிய கட்­சியின் பிர­தித்­த­லை­வ­ரான புதிய ஜன­நா­யக முன்­ன­ணி­யின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச வெற்றி பெறு­வது உறுதி என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தித்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார்.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தல் தொடர்­பாக வீர­கே­சரி எழுப்­பிய விசேட கேள்­வி­க­ளுக்கு வழ­ங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே இவ்­வாறு அவர் தெரி­வித்தார், அவ­ரு­ட­னான நேர்­காணல் விபரம் வரு­மாறு. 

கேள்வி:   கடந்த ஜனா­தி­பதி தேர்­தலை விட இந்­த­முறை மலை­ய­கத்தில் ஜனா­தி­பதி தேர்தல் எத்­த­கைய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் என எண்­ணு­கி­றீர்கள் ? 

பதில்:     கடந்த முறை­யை­விட “அன்னம்” சின்னம் அதி­க­ள­வான வாக்­கு­களை மலை­யக மாவட்­டங்கள் தோறும் பெற்று வெற்றி வாகை சூடும். காரணம் நாங்கள் 2015ஆம் ஆண்டு அன்னம் சின்­னத்தில் போட்­டி­யிட்ட மைத்­ரி­பால சிறி­சே­ன­விடம் முன்­வைத்த கோரிக்­கையின் பிர­காரம் வென்­றெ­டுத்த காணி உரிமை மற்றும் வீட்­டு­ரிமை விடயம் உள்­ளிட்ட பல உரிமை சார்ந்த விட­யங்­க­ளையும் அபி­வி­ருத்தி சார்ந்த விட­யங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்திக் காட்­டி­யுள்ளோம். நுவரெலியா மாவட்டம் மாத்­தி­ரம்தான் மலை­யகம் எனும் தோற்­றப்­பாடும் செயற்­பாடும் கடந்த காலங்­களில் இருந்­தது. அதனை அபி­வி­ருத்தி மற்றும் உரி­மை­சார்ந்த விட­யங்­களில் இல்­லாமல் ஆக்கி எங்­கெல்லாம் பெருந்­தோட்­டங்கள் உள்­ள­னவோ, எங்­கெல்லாம் லயன் வரிசை வீடுகள் உள்­ள­னவோ அங்­கெல்லாம் எமது பணி­களை விஸ்­த­ரிக்க வேண்டும் எனும் இலக்­கோடு முன்­னெ­டுத்து வரு­கின்றோம். மாத்­தறை முதல் மாத்­தளை வரை கேகாலை முதல் மொன­ரா­கலை வரை குறுக்கும் நெடுக்­கு­மாக மலை­ய­கத்தில் புதிய கிரா­மங்­களை நான் எனது அமைச்சின் ஊடாக முன்­னெ­டுத்து உள்ளேன். அனைத்து மாவட்­டங்­க­ளிலும் முழு­மை­யாக பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு இன்னும் பல காலம் தேவை. ஆனாலும் அந்தக்காலம் எப்­ப­டி­யா­ன­தாக இருக்­க­வேண்டும் எனும் நம்­பிக்கை இப்­போது உரு­வாக்­கப்­பட்­டு­வரும் புதிய கிராம சிந்­தனை ஊடாக மலை­யக மக்கள் இடத்தில் இப்­போது உரு­வா­கி­யுள்­ளது. அந்த எண்­ணத்தை முன்­கொண்டு செல்ல அன்னம் சின்­னத்­துக்கு அதி­க­ளவில் வாக்­க­ளிப்­பார்கள்.

கேள்வி: ஐக்­கிய தேசிய கட்­சியின் யானைச்­சின்­னத்­துக்குத் தான் மலை­யக மக்கள் வாக்­க­ளிப்­பார்கள் எனும் எண்­ணப்­பாடு பர­வ­லாக உள்ள நிலையில் “அன்னம்” சின்­னத்­துக்கு அதிக வாக்­கு­களைப் பெற முடியும் என நீங்கள் நினைக்­கி­றீர்­களா ?

பதில்:    நிச்­ச­ய­மாக. முதலில் நாம் இந்த மாயை­களைக் களைந்­தெ­றி­ய­வேண்­டிய தேவை ஒன்று உள்­ளது. எனது செருப்பை சின்­ன­மாக வைத்­தாலும் மலை­யக மக்கள் வாக்களிப்பார்கள் என ஐ­யாமார் இருந்த கால­மெல்லாம் இப்­போது மலை­யேறி விட்­டது. இப்­போது மக்கள் மிகத்­தெ­ளி­வாக இருக்­கி­றார்கள். நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்ற வாக்கு வீதம் கணி­ச­மாக குறை­வ­டைந்து வரு­கி­றது. கடந்த 2010, 2015 ஆகிய இரண்டு தேர்­தல்­க­ளிலும் மக்கள் தெளி­வா­கவே அன்னம் சின்­னத்­துக்கு வாக்­க­ளித்து உள்­ளார்கள். மஹிந்த ராஜ­பக்‌ஷ அதி­காரம் மிக்க ஜனா­தி­பதி ஆச­னத்தில் இருந்த இரண்டு சந்­தர்ப்­பங்­களில் அவர் போட்­டி­யிட்ட வெற்­றி­லைக்கு வழங்­காமல் நாம் ஆத­ரவு தெரி­வித்த அன்னம் சின்­னத்­துக்கு மக்கள் தெளி­வாக வாக்­க­ளித்­தார்கள். 2010 ஆம் ஆண்டு சரத் பொன்­சேக்கா தேசிய ரீதி­யாக தோல்வி அடைந்­தாலும் வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே தென்­னி­லங்­கையில் நுவ­ரெலியா மாவட்­டத்தில் மாத்­திரம் அன்னம் சின்னம் வென்று இருந்­தது. 2015 இலும் அன்னம் சின்னம் வென்று இருந்­தது. பொதுத்­தேர்­தலில் யானை சின்­னத்தில் போட்­டி­யிட்ட எனக்கு ஒரு லட்­சத்­துக்கு அதி­க­மான வாக்­கு­களை வழங்­கி­ய­துடன் எமது அணியில் நுவ­ரெ­லி­யாவில் மூன்று, பது­ளையில் இரண்டு, கண்டி, கொழும்பு மாவட்­டங்­களில் தலா இரண்டு என ஆறு ஆச­னங்­களை மக்கள் எமக்கு பெற்றுக் கொடுத்­தார்கள். வெற்­றி­லையில் போட்­டி­யிட்ட இ.தொ.கா.வுக்கு இரண்டு ஆச­னங்­களை மாத்­திரம் அதுவும் எங்கள் அணிக்கு கிடைத்­ததை விட சரி­பாதி அளவே வாக்­க­ளித்­தார்கள். எனவே எந்த சின்னம்? யார் வேட்­பாளர் என்­பதில் எல்லாம் மக்கள் மிகத்­தெ­ளி­வாக உள்­ளனர். அன்னம் அமோக வெற்றி பெறு­வது உறுதி 

கேள்வி:    இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் 32 அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்து இருக்கும் போது நீங்கள் ஒன்­பது கோரிக்­கை­களை மாத்­தி­ரமே முன்­வைத்து இருக்­கி­றீர்கள். இதற்­கான காரணம் என்ன?

பதில்:   இது பிர­தேச சபைத்தேர்­தலோ, மாகாண சபைத்தேர­்தலோ அல்ல. முழு நாட்­டுக்கும் ஒரு ஜனா­தி­ப­தியை தெரிவு செய்யும் பாரிய தேர்தல். இதில் எமது சார்பில் ஒட்­டு­மொத்த மலை­யக மக்­க­ளுக்­கான இலக்­காக கொள்கை சார்ந்த விட­யங்­களை கோரிக்­கை­யாக முன்­வைக்­க­லாமே அன்றி மாவட்ட தேர்தல் போன்ற கோரிக்­கை­களை முன்­வைத்து நாங்கள் அதிகம் கேட்­டு­விட்டோம் என மார்­தட்டிக் கொள்­வது சிறு பிள்ளைத் தன­மா­னது. அவர்­க­ளது 32இல் 10 நுவ­ரெலியா மாவட்­டத்­தையும் இரண்டு ஊவா மாகா­ணத்­தையும் மையப்­ப­டுத்­தி­ய­தாக உள்­ளது. எனவே இவை தேசிய தேர்தல் கோரிக்­கை­யாக பிர­தி­ப­லிக்­க­வில்லை. அவர்கள் பொதுத்­தேர்­தலை இலக்கு வைக்­கி­றார்கள். நுவ­ரெலியா, பதுளை மாவட்­டங்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிப்­பதன் ஊடாக தாம் வந்தால் இந்த இரண்டு மாவட்­டங்­க­ளிலும் அதிக அபி­வி­ருத்தி செய்வோம் என காட்ட முயற்­சிக்­கின்­றார்கள். இது அவர்­க­ளது கடந்தகால செயற்­பா­டு­க­ளிலும் காணலாம். இந்­திய வீட­மைப்­புத்­மிட்­டத்தின் 4000 வீடு­க­ளைக் கட்­டு­வ­தற்­காக மத்­திய, ஊவா மாகா­ணங்­களை மாத்­தி­ரமே குறிப்­பாக நுவ­ரெலியா, பதுளை மாவட்­டங்­க­ளையே தெரிவு செய்­தி­ருந்­தார்கள். ஆனால் பத்தாயிரம் வீட்­டுத்­திட்ட உடன்­ப­டிக்­கையில் அனைத்து மலை­யக மாவட்­டங்­க­ளையும் உள்­வாங்கி இந்­தி­யா­வுடன் ஒப்­பந்தம் செய்­துள்ளேன்.

கேள்வி:   அப்­ப­டி­யாயின் அந்த 32 ஐயும் நீங்கள் நிரா­க­ரிக்­கின்­றீர்­களா ?

பதில்:     இல்லை. அவை அனைத்தும் மலை­யக மக்கள் சார்ந்­த­வையே. அவை ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு பொருத்­த­மா­ன­தாக அமை­ய­வில்லை. உதா­ர­ண­மாக 32ஆவது கோரிக்­கையை நாங்கள் முழு விருப்­பத்­தோடு ஏற்­றுக்­கொள்­கிறோம். அதில் மலை­யக நக­ரங்­களை ஊட­றுத்துச் செல்லும் இடங்­களில் உள்ள மது­பான சாலை­களை மூடும் யோசனை. இது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், இது ஜனா­தி­பதி தேர்­தலில் போட்டியிடும் வேட்­பா­ள­ரிடம் வைக்க வேண்­டிய கோரிக்கை இல்லை. அத்­த­கைய மது­பான சாலை­களை தொடங்­கிய அர­சி­யல்­வா­தி­களே அவற்றை மூடினால் போது­மா­னது. பத்­த­னை­யிலும் உடப்­பு­சல்­லா­வை­யிலும் லபுக்­க­லை­யிலும் மெரா­யா­விலும் அமைந்­துள்ள மது­பான சாலைகள் யாருக்கு சொந்­த­மா­னவை என்­பது மக்­க­ளுக்கு தெரியும். இது­போல அர­சி­யல்­வா­திகள் தமது நண்­பர்கள், உற­வி­னர்கள் பெயர்­களை பினா­மி­களாகக் கொண்டு நடத்தி வரு­கி­றார்கள். அந்த கடை­களை அவர்களே மூடிக் கொண்டால் ஒரு கோரிக்கை குறைந்­தி­ருக்கும். அதே­போல அவர்கள் அமைச்சுப் பதவி வகித்த 32 வருட காலத்தில் ஒரு காலப்­ப­கு­திக்கு ஐந்து என நிறை­வேற்றி இருந்­தாலே இன்று புதிய கோரிக்­கை­களை தேட வேண்­டிய தேவை எழுந்­தி­ருக்கும். நாங்கள் நான்கு வரு­ட­கா­ல­மாக முன்­னெ­டுத்த விட­யங்­களின் தொடர்ச்­சி­யாக இன்னும் சில விட­யங்­களை முன்­வைத்து 9 கோரிக்­கை­களை முன்­வைத்­துள்ளோம். அதில் கல்வி, சுகா­தாரம், பெருந்­தோட்­டத்­துறை கட்­ட­மைப்பு மாற்றம் உள்­ளிட்ட தன­்வீட்டுத் திட்டம், காணி உரிமை முக்­கி­ய­மா­னது. நாங்கள் 2015இல் அ­தனை வெற்றி கொண்­டுள்ளோம். அது தொட­ரப்­ப­ட­வேண்டும் என்­பதில் உறு­தி­யாக உள்ளோம். அதனை அவ­ரது விஞ்­ஞா­ப­னத்­திலும் உள்­ள­டக்­கி­யுள்ளார். இ.தொ.கா. தமது 24ஆவது அம்­ச­மாக புதிய கிரா­மங்­களை அமைக்க உள்­ள­தாக கூறு­கின்ற போதும், அவர்கள் ஆத­ரவு தெரி­விக்கும் வேட்­பா­ள­ரான கோத்த­பாய ராஜ­பக்‌ஷ அதற்கு மாறாக மாடி லயன் முறையே கொண்­டு­வ­ரப்­படும் என தெளி­வாக சிங்­க­ளத்தில் குறிப்­பிட்­டுள்ளார். இத்­த­கைய ஏமாற்று வேலைகள் எம்­மிடம் இல்லை. எமது ஒன்­பதும் உறு­தி­யாக அடை­யப்­ப­டக்­கூ­டி­யது. அதனை நிறை­வேற்றிக் காட்டும் வல்­லமை எம்­மிடம் உண்டு. 

கேள்வி: நீங்கள் இந்த ஒன்­பது கோரிக்­கை­க­ளையும் கொண்ட ஒப்­பந்தம் ஏதும் செய்­த­தாக அறி­ய­மு­டி­ய­வில்­லையே?

பதில்:   அதுவும் ஓர் ஏமாற்று வேலைதான். கோத்த­பாய ராஜ­பக்‌ஷ வேட்­பாளர். அந்த கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்‌ஷ. ஆனால் இ.தொ.கா. ஒப்­பந்தம் செய்­தது ஜீ.எல்.பீரிஸுடன். அத­னால்தான் வீட­மைப்புத் திட்டம் குறித்து இ.தொ.கா. ஒரு வித­மா­கவும் கோத்த­பாய ஒரு வித­மா­கவும் பேசு­கின்­றனர். தேர்­த­லுக்கு முன்­ன­தா­கவே முரண்­பா­டுகள் வெளிப்­ப­டு­கின்­றன. எனவே ஒப்­பந்தம் செய்து என்ன பயன். நாங்கள் இத்­த­கைய ஒப்­பந்­தங்­களை நம்பத் தயா­ரில்லை. கோரிக்­கை­களை வைத்து உடன்­பா­டு­களை விஞ்­ஞா­ப­னத்­திலும் உள்­வாங்கிக் கொண்­டுள்ளோம். பொதுத்­தேர்­தலில் வெற்­றி­பெற்று நாமே அதனை முன்­னெ­டுப்போம். அதற்கு உடன்­பாடு தெரி­விக்­கின்ற ஜனா­தி­ப­தியை தெரிவு செய்து கொள்­வதே எமது நோக்கம். அதற்கு ஏற்ற வேட்­பா­ள­ராக இப்­போது சஜித் பிரே­ம­தா­சவும் அவ­ரது விஞ்­ஞா­ப­னமும் அன்னம் சின்­னமும் அமைந்­துள்­ளன. இத்­த­கைய சரி­யான முடிவை நாங்கள் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யாக மட்­டு­மல்ல நாட்டின் பிர­தான முஸ்லிம் கட்­சி­களும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் கூட அந்த முடி­வி­னையே எடுத்­தி­ருக்­கின்­றன. 

கேள்வி:   ஆயிரம் ரூபா, ஐம்­பது ரூபா, ஐயா­யிரம் ரூபா இதில் எது­வுமே சாத்­தி­ய­மா­க­வில்­லையே? 

பதில்:   ஆயிரம் ரூபா அடிப்­படை சம்­பளம் வாங்­கித்­த­ருவேன் இல்­லா­விட்டால் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை வாங்­கித்தருவேன் எனக் கூறிய இ.தொ.கா. தலைவர் அதற்­க­டுத்த நாள் திருட்டு அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வியைப் பெற்றுக் கொண்­டாரே தவிர ஆயிரம்

 ரூபாவைப் பெற்றுக் கொடுக்­க­வில்லை. அவர்கள் இறு­தி­யாக வாங்கிக் கொடுத்­தது வெறும் 20ரூபா என்­பதை யாரும் மறக்­க­வில்லை. அதுவும் அடிப்­படை இல்லை. மேல­தி­க­மாக பறிக்கும் கொழுந்­துக்கு 30/= வில் இருந்து 50/= என அதி­க­ரிக்­கப்­பட்ட மேல­திக 20/= மட்­டும்தான். என­வேதான் நாங்கள் 50/= நாள் ஒன்­றுக்கு அர­சாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம். அதனை நிச்சயமாக பெற்றுக் கொடுப்போம். அது தொடர்பான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை எமது கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் மேற்கொண்டு வருகிறார். இந்த பேட்டி வெளிவரும்போது அது தொடர்பான தெளிவான ஒரு பதிலை மக்கள் பெற்றுக் கொள்வார்கள். தீபாவளி முற்பணம் மேலதிக 5000/= ஐ பெற்றுக் கொடுக்க நான் முயற்சி மேற்கொண்டேன். அதனை யார் காட்டிக் கொடுத்து இல்லாமல் ஆக்கினார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். இப்போது தீபாவளி முடிந்துவிட்ட நிலையில் அதுவும் திருப்பி செலுத்த வேண்டிய கடன் முற்பணம் என்ற நிலையில் அதனைப் பெற்றுக்கொடுப்பதா அல்லது 50/= நாளாந்த சம்பளத்தில் 700 /= அடிப்படையுடன் மேலதிக கொடுப்பனவாக பெற்றுக் கொடுப்பதா என ஒப்பிட்டுப் பார்க்கும்போது திருப்பி செலுத்த தேவையற்ற நாளுக்கு 50/= படி அதனை வேலை செய்த நாள் எண்ணிக்கை அடிப்படையில் நிலுவையுடன் பெற்றுக் கொடுப்பதிலேயே நாம் கவனம் செலுத்தி உள்ளோம். நிச்சயம் அது பெற்றுக் கொடுக்கப்படும். 

நேர்­காணல்: பானா. தங்கம்