(செய்திப்பிரிவு)

கல்கிசை குற்ற விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை  மாலை தெஹிவளை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை கல்கிசை நீதவான் நீதிமன்றிலிருந்து பெற்றுக்கொண்ட சோதனை உத்தரவுக்கமைய சுற்றிவளைத்ததாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களும், விடுதியை முகாமைத்துவம் செய்து வந்த பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 51,39,45,மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் பாதுக்க, கல்நெவ,மற்றும் தர்கா நகர்  பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.