சிறு­பான்மை சமூ­கத்தின் ஆத­ரவு இல்லாமல் இந்த நாட்­டிலே ஜனாதி­பதி ஒரு­வரை உரு­வாக்க முடி­யாது என்ற செய்­தியை இன­வா­தி­க­ளுக்கு உணர்த்தும் தேர்­த­லாக எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்தல் அமை­ய­ வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

முன்னாள் மாகா­ண­சபை உறுப்­பினர் ரிப்கான் பதி­யுதீன் தலை­மையில் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து நேற்று மன்­னாரில் இடம்­பெற்ற பிர­சா­ரக்­கூட்­டத்தில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் உரை­யாற்­றுளையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு ­மேலும் கூறி­ய­தா­வது,

நாட்டின் எதிர்­கால தலைவர் ஒரு­வரை தெரிவு செய்யும் இந்தத் தேர்­தலில் நீங்கள் அமை­தி­யா­கவோ,  அலட்­சி­ய­மா­கவோ  இருந்­து­விடக்  கூடாது.

கடந்த காலங்­களில் எமது மதஸ்­த­லங்­களை நொருக்­கி­ய­வர்கள், உரி­மை­களைப் பறித்­தெ­டுத்­த­வர்கள், வியா­பா­ர ஸ்தா­ப­னங்­களை நாசப்­ப­டுத்­தி­ய­வர்கள், நிம்­ம­தியைக் கெடுத்­த­வர்கள் அனை­வரும் கோத்­த­பா­ய­வுக்குப் பின்னால் அணி­தி­ரண்­டுள்­ளனர். இவர்­களின் கன­வு­களைச் சிதைப்­ப­தற்­கா­கவே சிறு­பான்மை தலை­வர்­க­ளாகிய நாம் அனை­வரும் ஒன்று பட்­டுள்ளோம். எனவே இன­வா­தி­களின் சதி­களை முறி­ய­டிப்­ப­தற்கும் தடுப்­ப­தற்கும் நீங்கள் எம்­முடன் கைகோர்த்து சஜித்தை வெல்­ல­வை­யுங்கள்.

சிறு­பான்மை மக்கள் அனை­வரும் ஓர­ணியில் திரள்­வோ­மே­யானால் சஜித் பிரே­ம­தாச பாரி­ய­ வெற்­றியைப் பெறுவார்.நியா­யத்­துக்­கும் அநி­யா­யத்­துக்கு­மான இந்தத் தேர்­தலில் நியாயம் வெல்­ல­வேண்டும். நீதி வாழ­வேண்டும்.

இன­வா­திகள் தமது அணிதான் வெற்றி­பெ­று­மென்று தம்­பட்டம் அடிக்­கின்­றார்கள். நமது சமூ­கத்தை அழிப்­ப­தற்கு அத்­தனை முயற்­சி­க­ளையும் செய்­து­விட்டு இப்­போது வாக்­குக்­கேட்டு  வரு­கின்­றார்கள். போதாக்­கு­றைக்கு அவர்­க­ளது முக­வர்­களை வடக்கு, கிழக்­குக்கு அனுப்­பி­வைத்­துள்­ளார்கள். 

பெரு­வா­ரி­யான பணத்­துடன் வந்­துள்ள இந்தக் கோட­ரிக்­காம்­புகள் வடக்கு, கிழக்கு பிர­தே­சத்தில்  முகா­மிட்டு வாக்குக் கேட்­கி­ன்றார்கள், கற்றை கற்­றை­யாக காசை அள்ளி  விசு­று­கி­றார்கள். போதாக்­கு­றைக்கு இங்­குள்ள சில ­ப­ணக்­கா­ரர்­களும் இந்த சதிக்கு துணை­போ­வ­தாக அறி­கிறோம்.பணத்தைக் காட்டி வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்கும் இந்தக் கூட்­டத்­திடம் ஏமாந்து­வி­டா­தீர்கள். சோரம் ­போய்­வி­டா­தீர்கள். அவர்கள் தந்தால் கனி­மத்­துப்­பொ­ருட்கள் (யுத்­தத்தில் விட்­டுச்­செல்லும் பொருட்கள்) என நினைத்து வாங்­கிக்­கொள்­ளுங்கள்.

நாங்கள் ஊர் ஊராக, வீடு வீடாக வந்து வாக்குக் கேட்­க­மு­டி­யாது போய்­விட்­டாலும் நீங்கள் உணர்ந்து வாக்­க­ளி­யுங்கள்.சஜித் பிரே­ம­தா­சவை வெல்­ல­வைப்­பதன்  மூலம் நமது எதிர்­காலம் நமது மண்ணின் எதிர்­காலம் சிறப்ப­டை­­யும் என்­பதை மறந்­து­விட வேண்டாம் என்று தெரி­வித்தார்.

இந்நிகழ்வில் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச, அமைச்­சர்­க­ளான ஹக்கீம், மனோ­க­ணேசன், இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் எம்பிக்களான சபீக் ரஜாப்தீன்,  ஹுனைஸ் பாறூக், அஸ்லம், முத்தலி பாவா  பாறூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான், அலிகான் ஷரீப், நியாஸ், பாயிஸ், பிரதேச சபை தவிசாளர்களான முஜாஹிர், சுபியான், செல்லத்தம்பி உட்பட இங்கு பலர் உரையாற்றினர்.