கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்சாரத் தடை ஏற்பட் நிலையில் தற்போது அது சீர்செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் பிரதான மின்சாரம் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல முறை மின்சாரம் தடைப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்தன. 

மின்விநியோக தடையினால் விமான நிலைய செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் எனினும் அந்த சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிது நேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பிய போதிலும், பழுது பார்க்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.