சுமார் மூன்று இலட்சம் வாக்காளர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

நாளை தினத்திற்கு முன்னர் இவை விநியோகம் செய்யப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் வாக்களிப்பிற்கு பயன்படுத்துவதற்காக மாத்திரம் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

விசேட பாதுகாப்பு கடதாசியில் அச்சிடப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டையில், தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களூடாக விண்ணப்பதாரர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.