பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்  நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் மிட்லாண்ட் நகரங்களில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பெய்த கனமழை காரணமாக வீதிகள் எல்லாம் ஆறாக மாறி இடுப்பு அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாகனங்களை செலுத்த முடியாமல் மக்கள் ஒரு கடைத்தொகுதியில் ஓர் இரவு தங்கி தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், போரிஸ் ஜோன்சன் மேட்லாக் வருகையின் போது ஒரு மூக்குக்கண்ணாடி நிலையத்தில் வெள்ள நீரை சுத்தம் செய்ய உதவினார். அவர் ஊழியர்களிடம்  'நீங்கள் அதிர்ஷ்டசாலி, உங்கள் சொத்துக்களுக்கு எதுவும் சேதமடையவில்லை.' என கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் அமைப்பு 121 வெள்ள எச்சரிக்கைகளையும் மற்றும் இங்கிலாந்துக்கு 117 வானிலை எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

மண் சரிவுக்குப் பின்னர் மான்ஸ்ஃபீல்டில் 35 வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, டான்காஸ்டர் பகுதிகளில் வசிப்பவர்களும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

வடக்கு, ரயில் சேவை முற்றிலும் வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.