சசகுமார் நடித்த ‘கிடாரி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தர்புகா சிவா. இவர் தற்போது ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

‘ராஜதந்திரம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்புகா சிவா. இவர் ‘கிடாரி’ படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அறிமுகமானார். அதன்பிறகு சசிகுமார் நடித்த ‘பலே வெள்ளையத்தேவா’, உதயநிதி நடித்த ‘நிமிர்’ ஸ்ரீகாந்த் நடித்த ‘ராக்கி’, விரைவில் வெளியாக இருக்கும் தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இவர் ‘ராஜதந்திரம்’ என்ற படத்தைத் தொடர்ந்து மோ மற்றும் தனுஷ் நடித்த ‘தொடரி’ ஆகிய படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார்.

நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பயணித்த தர்புகா சிவா, இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்திற்காக தொடர்ந்து தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். தற்பொழுது ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்தை சுப்பர் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் சமீர் பரத் ராம் தயாரித்திருக்கிறார். பாடலாசிரியர் தாமரை பாடல்கள் எழுத, இயக்குநர் தர்புகா சிவாவே இசையமைத்திருக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.