இன, மத பேதமின்றி ஒரே குடையின் கீழான ஆட்சியை உருவாக்குவேன் -: யாழில் சஜித்

Published By: R. Kalaichelvan

08 Nov, 2019 | 07:04 PM
image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அபிவிருத்தியில் உச்சமடைந்த மாகாணங்களாக மாற்றுவேன் எனத் தெரிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நாட்டில் வாழும் மக்கள் அனைவரையும் இன மத பேதம் இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் வாழும் அமைப்பை உருவாக்குவேன் எனத் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஐனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இராஐாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் தலைமையில் நல்லூர் சங்கிலியன் புங்காவில்  இடம்பெற்றபோதே அவர் இததைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்

யாழ் மாவட்டத்திற்கு வந்திருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாவட்டத்தைப் பொருத்தவரையில் இங்கு பிரச்சனைகள் தேவைகள் பல இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அதனூடாக அபிவிருத்தியில் முதன்நிலை மாவட்டமாக இந்த மாவட்டத்தை உருவாக்குவேன்.

ஏழ்மையினை நீக்குவதற்காக சமுர்த்தி வேலைத் திட்டமொன்று நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இதனோடு இணைந்ததாக ஐனசவித் திட்டத்தையும் வழங்கி ஏழ்மையை இந்த நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

இந்த நாட்டில் 44 இலட்சம் பாடசாலை மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்களுக்கு இரண்டு இலவச சீருடையும் ஒரு பாதணியும் அதே போல பகல் போசனமும் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.

மேலும் பாலர் பாடசாலையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன். இப்பொழுது பணம் செலுத்தி தான் பாலர் பாடசாலையின் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது. பாலர் பாடசாலையின் ஆசரியருக்கு அரச சம்பளம் வழங்கப்படும். அதே போன்று உப ஆசிரியருக்கும் அரச சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலைகளுக்கு வசேடமாக மண்டபங்களும் நிர்மாணிக்கப்படும். 

பாலர் பாடசாலைக் கல்வியை இலவசக் கல்வித் திட்டத்தோடு இணைத்து செல்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்வேன்.

மேலும் விவசாயத் துறையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். குறிப்பாக நெல், சேனைப் பயிர்ச்செய்கை கட்டியெழுப்புவதற்கும் தேயிலை இறப்பர் தென்னை என இவை அனைத்திற்கும் தேவையான பசளையை இலவசமாக வழங்குவேன்.

யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் தொழில் நுட்பக் கல்லூரி உருவாக்கப்படும். அதே போன்று ஒரு தொழில் நுட்ப மையம், தொழில் நுட்ப புங்கா என்பனவும் உருவாக்கப்படும் இந்த தொழில் நுட்பக் கல்லூரியின் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களைப் பெற முடியும். அதனைப் போன்று தான் தகவல் தொழில் நுட்பம் ஆங்கில அறிவு என்பவற்றையும் இலவசமாக வழங்கக்க கூடிய அமைப்பாக இதனை மாற்றி அமைத்து இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

இந்த மாவட்டத்திலுள்ள சிறுகைத்தொழிலாளர்களுக்கும் பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கும் சலுகை அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். அதே போன்று யுத்தத்தின் காரணமாக தமது அவயங்களை இழந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வேலைத் திட்டத்தை முன்னெடுப்போம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளது. வடக்கு கிழக்கிற்கு வேறாக வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் கொண்டு வந்து அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாகாணங்களாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம்.

எனது கொள்கைப் பிரகடனம் புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை உங்களது அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஊடாக ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து சேரும். அந்தப் புத்தகத்திலே எதிர்காலத்தில் என்னென்ன விடயங்களை இந்த நாட்டிலே நாங்கள் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என்பது உள்ளடங்கப்பட்டிருக்கிறது.

யுத்தத்தின் பிறகு எவருமே சர்வதேச மாநாடு ஒன்றை வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இதுவரை நடாத்த முடியாமல் போனது. ஆகவே என்னுடைய அரசாங்கத்திலே அந்த மாநாடுகளை வடகிழக்கு மாகாணங்களிலே நடாத்துவோம்.

அதே போன்று ஒருமித்த நாட்டில் இனமத கட்சி என்ற பேதமில்லாமல் அனைவரும் தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரு தாய் மக்களாக ஒரே சட்டத்தின் கீழ் வாழக் கூடிய அமைப்பை எதிர்கால அரசாங்கத்தில் நான் நிச்சயமாக உருவாக்குவேன்.

யாழ் மாவட்டத்திலே 15 பிரதேச செயலகங்கள் இருக்கிறது. 435 கிராம சேவகர் பிரீவுகள் இருக்கிறது. ஆயிரத்து 611 கிராமங்கள் இருக்கிறது. இதை உள்ளடக்கிய அனைத்து மக்களுக்கும் நிச்சயமாக அபிவிருத்தி செய்வேன். இந்த யாழ் மாவட்டத்தை அபிவிருத்தியில் உச்ச கட்டத்தில் திகழும் மாவட்டமாக நிச்சயமாக நான் மாற்றியமைப்பேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41