முழு நாட்டுக்கும் ஜனசவிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

என்னுடைய அரசாங்கத்தில் இரண்டு சீருடை துணிகளை 44 இலட்ச மாணவர்களுக்கு வழங்கவும், உரமானியத்தை இலவசமாக வழங்குவதோடு,டிஜிட்டல் துறையாகவும் ஏற்படுத்துவதோடு, அனைத்து பிரதேச செயலகங்களிலும் நவீன வசதிகளை ஏற்படுத்துவதோடு, புதிய சட்ட ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமித்து துஷ்பிரயோகம் , களவு , திருட்டு மற்றும் குற்றங்கள் இல்லாத துறைகளை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவோம்.

திருகோணமலை மாவட்டத்தில் புதிய வீட்டுத் திட்டங்களை ஏற்படுத்துவதோடு ,காணி உறுதிப் பத்திரங்கள், மீன் பிடி அனுமதிப் பத்திரங்களை ஏற்படுத்துவதோடு, திருகோணமலை மகேசர் விளையாட்டரங்கினை சர்வதேச விளையாட்டரங்காக மாற்றுவேன்.

அதேபோன்று முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பிணையில்லாத மூன்று இலட்சம் கடன் திட்டம் , பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு சம்பள அதிகரிப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு படைக்கு விசேட வசதிகள் மற்றும் முப்படைக்கு வசதிகள் மற்றும் யானை பிரச்சினைக்கு தீர்வு போன்றன என்னுடைய அரசில் வழங்குவேன்.

அத்தோடு பதினொரு பிரதேச செயலகத்திலும்  அனைத்து வசதிகளையும் புதிய திட்டங்களையும் ஏற்படுத்துவேன் என குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.