(எம்.ஆர்.எம்.வஸீம்)

ராஜபக்ஷ் அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக வெளிப்படுத்த நான் தயார். முடியுமானால் இதுதொடர்பாக நேரடி விவாதத்துக்கு நாமல் ராஜபக்ஷ், ரோஹித்த அபேகுணவர்த்தன வரவேண்டும் என சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

அம்பலங்கொடையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிபோதே இவ்வாறு சவால் விடுத்தார். 

 கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக அனைவரும் என்னையே குற்றம்சாட்டிவருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து நான் விடுதலையாகவேண்டும். அதனால்தான் நாமல் ராஜபக்ஷ், ரோஹித்த அபேகுணவர்த்தன, ஷெஹான் சேமசிங்க மற்றும் காஞ்சன இவர்கள் யார்வேண்டுமானாலும் என்னுடன் விவாதத்துக்குவரலாம். இவர்கள் அனைவரும் ஒன்றாக வந்தாலும் பராவாயில்லை. நான் தனியாகவே வருவேன்.

அத்துடன் இந்த விவாதத்தில் கடந்த 2010 முதல் 2015வரை இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக மாத்திரம் கதைப்போம். இந்த விவாதம் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெறவேண்டும். யார் மோசடிக்காரர்கள் என்பதை அப்போது பார்த்துக்கொள்ளலாம். தைரியம் இருந்தால் 13ஆம் திகதிக்கு முன்னர் வர வேண்டும் என்றும் கூறினார்.