ஒரு மாதத்தில் 3214 முறைப்பாடுகள்  - சுயாதீன தேர்தல் ஆணைக்குழு 

Published By: R. Kalaichelvan

08 Nov, 2019 | 06:12 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒரு மாதத்தில்  3214 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதிகளவிலான  முறைப்பாடுகள்  தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பிலேயே  பதிவாகியுள்ளதுடன்,  அவ்வாறான முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கே அதிகம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய பிற்பகல் 4 மணியிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 24  மணித்தியாலத்திற்குள் தேர்தல் தொடர்பில் 131 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 97 முறைப்பாடுகளும் , தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 34 முறைப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்போது சட்ட மீறல்கள் தொடர்பில் 128  முறைப்பாடுகளும் , சூன்று முறைப்பாடுகள் தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 31 நாட்களுக்குள் 3214 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2250 முறைப்பாடுகளும் , தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 964 முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக மாத்திரம் 3087 முறைப்பாடுகளும் , தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 102 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை பெப்ரல் அமைப்பிற்கு கடந்த மாதம் 27 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 வரையான 12 நாட்களுக்குள் தேர்தல் தொடர்பில் 273 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதில் 197 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் , 76 முறைப்படுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 464 முறைப்பாடுகளும் , சட்டமீறல்கள் மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் தொடர்பில் 497 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. 39 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதுடன் இதனூடாக 47 சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகளின் போது காயமடைந்த நிலையில் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55