கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டு சிகரெட்டுகள் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேலை கைது செய்யப்பட்டதோடு ,  அவரிடம் இருந்து 1200 சிகரெட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர் வலஸ்முல்ல  பிரதேசத்தை சேர்ந்வர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.