கிர்கிஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் இன்று இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். 

தீ விபத்தைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபர் குறித்த ஹோட்டலில் பணி புரியும் ஒருவர் ஆவார். 

தீயணைப்பு படையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் ஹோட்டலில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.