பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவுக்கு ஆதரவு தெரிவித்து பொலநறுவை பிரதேசத்தில் இடம்பெறும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொலநறுவை, மன்னம்பிட்டியவில் இடம்பெற்றுவரும் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இவ்வாறு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.