(இராஜதுஐர ஹஷான்)

பயங்கரவாதி சஹ்ரானின் மனைவியின் ஆதரவுடன் பொதுஜன பெரமுனவின் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சேறு பூசும்  செயற்பாடுகளை தற்போது அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன  முன்னெடுத்துள்ளார்கள்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் கனவு  நவம்பர்  16ம் திகதியுடன்   கலைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பொலனறுவை  நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின தேர்தல் பிரச்சார  கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய   பிரச்சினைக்கு   தீர்வு   வழங்கும் விவகாரத்தில்  ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாஸ   சிங்கள மக்களை ஏமாற்றுகின்றார். தமிழ் மொழியில் ஒரு விதமாகவும், சிங்கள மொழியில் பிறிதாரு விதமாகவும்    குறிப்பிடபபட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு சமஷ்டியாட்சி முறைமைக்கு  ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்   அடிபணிந்துள்ளமை இம்முறையே முதல் முறையாக காணப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில்  வெற்றிக் கொள்வதற்கு  ஐக்கிய தேசிய கட்சி  ஆரம்ப காலத்தில் இருந்து  சட்டரீதியிலும், குறுக்கு வழியிலும் பல   முயற்சிகளை முன்னெடுத்தது அவையனைத்தும் தோல்வியிலே முடிந்துள்ளது. 

இன்னும்  06  நாட்களில் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறவுள்ளது. இனவாதிகளின் கட்டளைக்கு இணக்கம் தெரிவிக்காத பலமான  தலைமைத்துவத்திலான அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும்.

தேர்தலில் தோல்வி நிச்சயம்  என்பதை  ஐக்கிய தேசிய கட்சி தற்போது  உணர்ந்துள்ளது. கடந்த  காலங்களில்  முன்னெடுத்த முறையற்ற தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

தற்போது பயங்கரவாதி  சாஹ்ரானின் குடும்பத்தில் உதவியினையும் அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித் சேனாரத்த  ஆகியோர் நாடியுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் பயங்கரவாதி  சாஹ்ரானிற்கும் தொடர்பு இருந்ததாக  பயங்கரவாதி  சஹ்ரானின் மனைவின் ஆதரவுடன் குறிப்பிடுவதற்கு  அரசாங்கம் பல முயற்சிகளை முன்னெடுக்கின்றது.

இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு  இம்முறை  நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். 

சிறந்த தீர்வினை  இம்முறை  நாட்டு மக்கள் முன்னெடுப்பார்கள். அரசாங்கத்தில் அரசியல் சூழ்ச்சிகள்  ஏதும் வெற்றிப்பெறாது என அவர் தெரிவித்தார்