(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், சுதந்திர கட்சிக்கும் இடையிலான  கூட்டணியில் எவ்வித  முரண்பாடுகளும் கிடையாது.

கூட்டணிக்கு ஆதரவு  வழங்க முடியாது என்று     குறிப்பிடுபவர்களின் கருத்து அவர்களின் தனிப்பட்ட  தீர்மானாகும் அதற்கும் கட்சிக்கும் எவ்வித  தொடர்பும் கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பொதுச்செயலாளர்  சாகர காரியவசம் தெரிவித்தார்.

பொதுஜன  பெரமுனவினவுடன்  சுதந்திர கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைத்துக் கொண்டமை இரு தரப்பினர் தலைவர் மாத்திரம் எடுத்த தீர்மானம் அல்ல,  இரு தரப்பின்  தொகுதி அமைப்பாளர்கள் உட்பட  பலரது தீர்மானங்களை கொண்டே கூட்டணி கைச்சாத்திடப்பட்டது.

சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என்று தற்போது   பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர்கள்  சிலர் குறிப்பிட்டுள்ளமை  கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் தெரிவித்துள்ள கருத்து அவர்களது தனிப்பட்ட தீர்மானமாகும். அதற்கும் கட்சிக்கும் எவ்வித  தொடர்பும் கிடையாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன  என்ற புதிய  கூட்டணியிலே  பொதுஜன பெரமுன உட்பட அதில் செல்வாக்கு செலுத்தும் அனைத்து கட்சிகளும்  ஒன்றினைந்து செய்ற்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.    

கட்சியின் யாப்பில் அனைத்து  தரப்பினருக்கும் முழுமையான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் அனைவரும் ஒன்றினைந்தே போட்டியிடுவோம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எக்காரணிகளுக்காகவும் இந்த கூட்டணி பிளவுப்படாது குறிப்பாக  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் முரண்ப்பட்டுக்  கொள்வதற்கான தேவையும் கிடையாது என அவர் தெரிவித்தார்.