தீவிரமடையும் டெங்கு ! இதுவரை 85 பேர் பலி !

By T. Saranya

08 Nov, 2019 | 03:10 PM
image

நாட்டில் டெங்கு நோய் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 85 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 64,290  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்  அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பருவப் பெயர்ச்சி காலநிலையை அடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக நுளம்புகள் உள்ள இடங்களை துப்புரவு செய்வது தொடர்பில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர்  அருண ஜயசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுமானத் துறையில் ஒரு தேசியக் கொள்கை...

2022-11-30 10:06:51
news-image

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம்...

2022-11-30 09:09:51
news-image

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்தவேண்டும்...

2022-11-30 09:02:29
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06
news-image

மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால்...

2022-11-29 16:06:19