சீனா குவாண்டாங் மாநிலத்தில் உள்ள ஹுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் காதுக்குள் இருந்து கரப்பான் பூச்சிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளார்கள்.

காதுக்குள் ஏதோ அசைவு இருப்பதை உணர்ந்து, இளைஞன் தனது குடும்பத்தினரிடம் காதுக்குள் எதாவது இருக்கிறதா என பார்க்க கூறியுள்ளார்.

ஆனால், அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. வலி அதிகரித்ததன் காரணமாக உடனே அவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரின் காதை பரிசோதித்துப் பார்த்த வைத்தியருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. காதுக்குள் ஒரு கரப்பான் பூச்சி பத்துக்கும் மேற்பட்ட குட்டிகளோடு இருந்துள்ளது. இதனால் உடனடியாக ஒவ்வொரு கரப்பான் பூச்சியாக கருவி மூலம் வெளியே எடுத்துள்ளனர்.

குட்டிகளை வெளியே விரைவில் எடுத்துவிட்டாலும், தாய் கரப்பான் பூச்சியை அகற்றுவதில் வைத்தியர்களுக்கு பெரும் சிரமம் இருந்துள்ளது. இதனால் களிம்பு கொண்டு காதை சுத்தப்படுத்தி நீண்ட போராட்டத்துக்குப்பின் தாய் கரப்பான்பூச்சியை அகற்றியுள்ளனர். ”லீவ் தினமும் சாப்பிட்டதுபோக மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே வைத்துள்ளார். அதனால் உணவை சாப்பிட வரும் கரப்பான் பூச்சிகள் காதுக்குள் சென்றிருக்கிறது.

எத்தனை நாட்களாக கரப்பான் பூச்சி காதில் இருந்தது என தெரியவில்லை என வைத்தியர் தெரிவித்துள்ளார்.