தெற்காசியா முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதய பாதிப்பால் 15 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு திறந்த நிலையிலான இதய வால்வு மாற்று சத்திரசிகிச்சை செய்து கொள்வது குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.

இதன் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் இதய பாதிப்பின் போது, இதய வால்வு மாற்று சத்திரசிகிச்சை செய்து கொள்வதில் பெரும் சவால்கள் இருந்தது. ஆனால் தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் டி. ஏ. வி. ஆர். ( Direct Access Valve Replacement) என்ற சத்திர நவீன சத்திரசிகிச்சையின் மூலம் அவர்களுக்கு இதய வால்வு மாற்று சத்திர சிகிச்சை செய்து, அவர்களின் இதய பாதிப்பை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

பொதுவாக 50 வயது அல்லது 60 வயது மேற்பட்டவர்களுக்கு திறந்த நிலையிலான இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதில்லை. ஏனெனில் இத்தகைய சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்கள், இவ்வகையினதான சத்திர சிகிச்சைக்கு பின்னரான பக்கவிளைவு குறித்த அச்சம் ஒரு காரணமாக இருந்தது.

ஆனால், தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் டி. ஏ. வி. ஆர். என்ற நவீன சத்திரசிகிச்சையின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குறைவான வலியில் சத்திரசிகிச்சை செய்து, இதய பாதிப்பைக் குணப்படுத்த இயலும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இனி அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் இதய வால்வு மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்டு, அவர்களின் இதய பாதிப்பைக் குணப்படுத்த இயலும்.