முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளர் சம்பிக்க கருணாரத்ன ஒரு கிலோ தங்கத்துடன் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலஸ்கமுவையில் அமைந்துள்ள வீட்டிலிருந்தே ஒரு கிலோ தங்கத்தினை பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை, இதற்கு முன்னர், அவர் கடந்த அரசாங்கத்தின்போது முன்னாள் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தின் அதிகாரியாகவும் தேசிய லொத்தர் சபையின் ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் 3 அரச நிறுவனங்களிலும் சம்பளம் பெற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.