பும்ராவின் சிலைக்கு பூஜைசெய்யவேண்டும்- கலீல் அகமட்டின் பந்துவீச்சின் பின்னர் ரசிகர்கள் கருத்து

Published By: Rajeeban

08 Nov, 2019 | 12:32 PM
image

பங்களாதேஸ் அணிக்கு எதிரான இரண்டாவது  ரி 20 போட்டியில் மோசமாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமட்டினை இந்திய அணி ரசிகர்கள்டுவிட்டரில் கேலிசெய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

 கலீல் அகமட்டின் பந்துவீச்சில் தொடர்ச்சியாக ஏழு பவுண்டரிகளை பங்களாதேஸ் துடுப்பாட்ட வீரர்கள் பெற்றதை சுட்டிக்காட்டி கலீல் அகமட்டினை கேலிசெய்து ரசிகர்கள் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.

முதல் ரி20 போட்டியில் இறுதி நான்கு பந்துகளிலும் நான்கு பவுன்டரிகளை  விட்டுக்கொடுத்த  கலீல் அகமட்நேற்று முதல் மூன்று பந்துகளில் மூன்று பவுண்டரிகளை கொடுத்திருந்தார்.

ரசிகர்கள் இது குறித்த  தங்கள் அதிருப்தியை வேடிக்கையாக வெளியிட்டுள்ளனர்.

இந்தியர்கள் பும்ராவின்சிலைக்கு ஒரு நாளைக்கு மூன்று தடவை பூஜைசெய்யவேண்டும் என்பதை கலீல் அகமட்டின் பந்துவீச்சு உணர்த்தியுள்ளது என ரசிகர் ஒருவர் டுவிட்டரில்  தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் கலீல் அகமட் பந்துவீசிய விதத்திற்கு பின்னர் ரோகித் சர்மாவை தவிர வேறு எந்த இந்தியஅணிதலைவரும்  அகமட்டிற்கு ஆதரவளித்திருக்கமாட்டார் என மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருட உலக கிண்ணப்போட்டிகளிற்கான அணியில் கலீல் அகமட்டை சேர்ப்பது குறித்து பரிசீலித்தால் கூட விராட்கோலியை எனது நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவேன் என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59