இந்தியாவில் ரயில் கடவைகளை கடப்பதும், அதில் பயணிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஏனெனில் ரயில் கடவைகளை கடப்பது உயர் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மேற்குப் பிராந்தியத்தில் ரயில் கடவைகளை கடக்க முயன்ற 721 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் ரயில் தண்டவாளங்கில் மக்கள் பயணிப்பதையும் கடப்பதைதயும், தடுப்பதற்காக இந்திய ரயில்வே தனித்துவமான பிரசாரமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். 

குறிப்பாக இந்தியாவின் மேற்குப் பகுதியில் எம தர்மராஜா போன்று வேடம் அணிந்து, ரயில் கடவைகளில், தண்டவாளங்களில் பயணம் மேற்கொள்வோரை இந்த எம தர்மராஜாவால் பிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றார்கள்.

மக்களின் உயிர்களை காப்பாற்றும் இந்த எம தர்மராஜாவின் செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருவதுடன் பெரும் பாராட்டையும் பெற்று வருகின்றது.