இம்­மாதம் 16 ஆம் திக­தி­யன்று ஜனாதி­பதித் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. அன்­றைய தினம் வாக்­க­ளிக்கத் தகு­தி­யுள்­ள­வர்கள் யார்? யார்? என்­பதை தேர்தல் ஆணை­யாளர் உங்­க­ளுக்கு தபால் மூலம் தெரி­வித்­தி­ருப்பார்.

ஆகவே தேர்தல் தினத்­தன்று நீங்கள் உங்­க­ளுக்கு உரித்­தான அவ் உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையை எடுத்துக் கொண்டு அந்த அட்­டையில் நீங்கள் எங்கே வாக்­க­ளிக்கச் செல்­ல­வேண்டும் என்று குறிக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் செல்ல வேண்டும்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்­திற்குச் செல்­லும்­போது கட்­டாயம் உங்­க­ளது அறி­மு­கத்தை உறு­திப்­ப­டுத்தும் பின்­வரும் ஆவ­ணங்­களில் ஒன்றை எடுத்­துச்­செல்ல வேண்டும்.

1. தேசிய அடை­யாள அட்டை

2. செல்­லு­ப­டி­யான கட­வுச்­சீட்டு

3. செல்­லு­ப­டி­யான சாரதி அனு­ம­திப்­பத்­திரம்

4. அரச சேவை ஓய்வு ஊதிய அட்டை

5. பிர­தேச செய­லா­ளரால் விநி­யோ­கிக்­கப்­பட்ட முதியோர் அடை­யாள அட்டை

6. மத­கு­ரு­மார்­க­ளுக்­கான ஆட்­களைப் பதிவு செய்யும் திணைக்­க­ளத்தால் விநி­யோ­கிக்­கப்­பட்ட அடை­யாள அட்டை

7. தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் விநி­யோ­கிக்­கப்­பட்ட தற்­கா­லிக அடை­யாள அட்டை என்­ப­வற்றில் ஒன்றை கட்­டாயம் நீங்கள் எடுத்­துச்­செல்ல வேண்டும்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் உள்ளே நடை­பெ­று­பவை

உங்­க­ளது உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டையில் நீங்கள் வாக்­க­ளிக்க வேண்­டிய நிலையம் குறிக்­கப்­பட்­டி­ருப்­பதால், அந்­நி­லை­யத்­திற்குச் சென்றே உங்கள் வாக்கை நீங்கள் அளிக்­க­வேண்டும். வேறு நிலை­யங்­களில் உங்கள் வாக்கை அளிக்க முடி­யாது என்­பதை மனதில் வைத்­துக்­கொள்­ளுங்கள்.

வாக்­க­ளிப்பு நிலை­யத்தின் உள்ளே இருக்கும் தேர்தல் அதி­கா­ரிகள் உங்­க­ளது வாக்­காளர் அட்­டை­யையும் உங்­க­ளது அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் அடை­யாள அட்­டை­யையும் பரி­சீ­லனை செய்த பின்னர் உங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்குத் தேவை­யான வாக்­குச்­சீட்டை வழங்­கு­வார்கள். அவ்­வாக்­குச்­சீட்டைப் பெற்­றுக்­கொண்டு வாக்­க­ளிப்­ப­தற்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள இடத்­திற்குச் சென்று உங்­க­ளது வாக்கை அளித்த பின்னர் அதனை வாக்குச் சீட்டுப் பெட்­டிக்குள் போட வேண்டும். அத்­துடன் உங்­க­ளது வாக்­க­ளிப்பு வேலை முடி­வ­டை­கி­றது. அமை­தி­யாக வீட்­டுக்குச் செல்ல வேண்டும்.

 

இனி வாக்­குச்­சீட்டில் நீங்கள் எவ்­வாறு வாக்­க­ளிக்க வேண்டும்  எனப் பார்ப்போம்.

முக்­கிய பகுதி இது­வே­யாகும்.

வாக்குச் சீட்டில் அபேட்­ச­கர்­க­ளது பெயர்கள் இருக்கும். அவர்­க­ளது சின்­னங்­களும் இருக்கும். ஆகவே நீங்கள் முதலில் செய்­ய­வேண்­டி­யது, போட்டி போடும் அபேட்­ச­கர்­களில் ஒரு­வ­ருக்கா அல்­லது இரு­வ­ருக்கா அல்­லது மூவ­ருக்கா வாக்­க­ளிக்க விரும்­பு­கி­றீர்கள் என்­பதை தீர்­மா­னித்துக் கொள்­ள­வேண்டும். ஒரு­வ­ருக்கே வாக்­க­ளிக்க விரும்­பினால் வாக்குச் சீட்டில் பின்­வ­ரு­மாறு குறி­யி­டலாம்.

X புள்­ளடி இடு­வதன் மூலம் அதனைத் தெரி­விப்­பது நல்­லது.

மேற்­படி வாக்குச் சீட்டு பரி­பூ­ர­ண­மா­னது. ஆகவே அந்த வாக்குச் சீட்டு செல்­லு­ப­டி­யா­ன­தொன்­றாக எடுக்­கப்­படும். நிரா­க­ரிக்­கப்­பட­மாட்­டாது.

மாதிரி வாக்­குச்­சீட்டு (2) இல் நீங்கள் ஒரு­வ­ருக்கு மேற்­பட்­ட­வ­ருக்கு வாக்­க­ளிக்க விரும்­பு­கி­றீர்கள் என எடுத்­துக்­கொண்டால் அந்த வாக்குச் சீட்டில் இலக்­கங்கள் மூலமே அடை­யா­ள­மிட வேண்டும். X என்று ஒரு­வ­ருக்கும் மற்­றை­ய­வர்­க­ளுக்கு இலக்கம் 2,3 என்­பதன் மூலம் அடை­யா­ளப்­ப­டுத்­தினால் அது செல்­லு­ப­டி­யா­காது.

ஆகவே நீங்கள் கவ­னிக்க வேண்­டி­யது, இலக்­கங்கள் மூலம் தனது வாக்­கு­ரி­மையை தெரி­விக்க விரும்­பினால் இலக்­கங்கள் மூலமே சக­ல­தையும் தெரி­விக்க வேண்டும். இலக்கம் மூலம் சில­வற்­றையும் X என்­பதன் மூலம் மற்­றை­ய­வற்­றையும் தெரி­விக்கக் கூடாது. அப்­படித் தெரி­வித்தால் அவ்­வாக்கு செல்­லு­ப­டி­யா­காது போகும். ஆகவே கவ­ன­மாக உங்கள் வாக்கை அளி­யுங்கள். ஆகவே மாதிரிச் சீட்டு 2 இல் காட்­டி­யுள்ள மாதிரி வாக்­குச்­சீட்டு செல்­லு­ப­டி­யான வாக்­குச்­சீட்­டாகும்.

மாதி­ரிச்­சீட்டு (3) செல்­லு­ப­டி­யா­காது. மாதிரிச்சீட்டு 4 உம் செல்லுபடியாகாது.

கவனத்தில் கொள்ள வேண்டியது

1. வாக்குச்சீட்டில் X என்று மட்டும் எழுதினால் அது செல்லும்

2. வாக்குச் சீட்டில் X என்றும் மற்றும் 2, 3 என எழுதினால் அது செல்லாது.

3. வாக்குச் சீட்டில் 1, 2, 3 என எழுதினால் அது செல்லும்.

4. வாக்குச் சீட்டில் XXX என மூன்று பெயருக்கு அடையாளப்படுத்தினால் செல்லாது.

விளக்கம் எதுவும் தேவையாயின் 077 6705511 க்கு Phone பண்ணி விளக்கத்தை என்னிடம் தெரிந்து கொள்ளலாம்.

- சட்டத்தரணி கே.ஜீ.ஜோன்