விமானத்துக்கு வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல் விடுத்த இங்கை பிரஜையின் தண்டனைக்காலம் குறைப்பு!

Published By: Vishnu

08 Nov, 2019 | 10:30 AM
image

விமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவின் விளக்கமறியல் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருடன் விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று, விமானத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள் அந்த நபரை பிடித்து விமான இருக்கையில் கட்டி வைத்தனர். சம்பவத்தை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டது.

அங்கு விமான நிலையத்தில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என தெரியவந்துள்ளது.

அவர் கையில் வைத்திருந்தது ப்ளுடூத் என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவத்தில் தீவிரவாத நோக்கம் எதுவும்  இல்லை எனவும் விசாரணையில் தெரிவித்தனர். 

மெல்போர்னுக்கு திரும்ப கொண்டு வரப்பட்ட பயணிகள் உரிய ஓய்வுக்கு பின்னர் வேறு விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டனர்.

எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் அவருக்கு 12 வருடம் விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

இந் நிலையில் அவர் பாரதூரமான மனநல பாதிப்புக்கு உள்ளானவர் என்று நீதிமன்றில் மேன்முறையீட்டு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 5 ஆண்டுகளில் அவரால் பிணை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21