(எம்.மனோ­சித்ரா)

இலங்கை தேசிய தொழி­லாளர் காங்­ரஸின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான எம்.எஸ்.செல்­ல­சாமி புதிய ஜன­நா­யக முன்­னணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவ­ளிக்க தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரி­வித்தார்.

இலங்கை தொழி­லாளர் காங்கி­ரஸின் முன்னாள் பொதுச் செய­லா­ள­ரான இவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் மலை­யக மக்­கள் எடுக்க வேண்­டிய தீர்­மானம் குறித்து தெரி­விக்­கை­யி­லேயே இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாடற்­ற­வர்­க­ளாகக் காணப்­பட்ட இந்­திய வம்­சா­வளி மலை­யக மக்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரி­மையை வழங்­கியவர் அமரர் ரண­சிங்க பிரே­ம­தாச ஆவார். மலை­யக மக்­களின் பிர­ஜா­வு­ரி­மைக்­காக நானும் போரா­டி­யி­ருக்­கிறேன்.  சகல மக்கள் மீதும் சம­மான மதிப்பு மிக்க அவ­ரு­டைய மக­னான சஜித் பிரே­ம­தாச அடுத்த ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ முடியும்.

எனவேதான் நான் அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்தேன். சஜித் பிரே­ம­தா­சவை வெற்றிபெறச் செய்­வ­தற்கு மலை­யக மக்கள் அனை­வரும் ஒன்­று­பட வேண்டும்.

மேலும் எனது பெயரைப் பயன்­ப­டுத்தி எதிர்த்­த­ரப்­பி­னரால் போலி­யான பிர­சா­ரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஏமாறாமல் மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றார்.