இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 153 ஓட்டங்கள‍ை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மூன்று இருபதுக்கு - 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது.

சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரில் 1:3 என்ற கணக்கில் முன்ன்லையில் உள்ளது.

இந் நிலையில‍ை தொடரின் இரண்டாவது போட்டி இன்று மாலை 7.00 மணிக்கு ராஜ்கோட்டியில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

லிட்டன் தாஸ் 29 ஓட்டத்தையும், மொஹமட் நைம் 36 ஓட்டத்தையும், சவுமிய சர்கார் 30 ஓட்டத்தையும், முஷ்பிகுர் ரஹிம் 4 ஓட்டத்துடனும், அபிப் ஹூசேன் 6 ஓட்டத்துடனும், மாமதுல்லா 30 ஓட்டத்துடனும் ஆட்மிழக்க மொஸ்டிக் ஹூசேன் 7 ஓட்டத்துடனும், அமினுல் இஷ்லம் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டுக்களையும், தீபக் சாஹர், கலில் அஹமட் மற்றும் வோசிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.