ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துக்கல - மடமோதர பகுதியில் பாதை தாழிறங்கியுள்ளதால் போக்குவரத்தில் தடையேற்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரிகள் பாதை புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் சிறிய வாகனங்களுக்கும் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளுக்கும் மாத்திரமே போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கனரக வாகனங்கள் கண்டி பேராதனை பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் பஸ் வண்டிகளில் செல்லும் பயணிகள் குறித்த இடத்தில் இறங்கி பாதையை கடந்த பின்னர் பஸ்ஸின் மீண்டும் பயணிக்கும் வகையில் போக்குவரத்து நடைபெறுவதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர். 

- மு.இ.ராமசந்திரன்