இனியொருபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் செல்லமாட்டேன் : வசந்த சேனாநாயக்க

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 06:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

செயற்பாட்டு ரீதியலான அரசியலை பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ  தொடர்ந்து முன்னெடுத்து செல்வாராயின் அவருக்கு ஆதரவு வழங்க தயார்.

இனியொருபோதும்  ஐக்கிய தேசிய கட்சியின்  பக்கம் செல்லமாட்டேன். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் தோல்வியடைவார் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  வசந்த சேனாநாயக்க  தெரிவித்தார்.

 கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு  எதிர்க் கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு முறையான சிறந்த அரசாங்கத்தினாலேயே தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும். மீண்டும் முரண்பாடுகளுடன்  அரச நிர்வாகத்தினை முன்னெடுக்க முடியாது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ  இதுவரையில் அவர் தலைமையிலான அரசாங்கத்தில் யார்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க  என்று குறிப்பிடவில்லை. ஆனால்  நான் தான் மீண்டும் பிரதமர்  என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுக் கொள்கின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  சஜித் பிரேமதாஸ  தெரிவு செய்யப்பட வேண்டும் என்று   கட்சியின் உறுப்பினர்கள்  பல்வேறு செயற்பாடுகள் ஆரம்பத்தில் முன்னெடுத்தார்கள்.

அது அனைத்தும் கட்சியின்   கொள்கைகளுக்கு முரனாகவே காணப்பட்டது. பாரிய  நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெயர் குறிப்பிடப்பட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு  ஆரம்பத்தில் ஆதரவு வழங்குவதாகவே தீர்மானித்தேன்.

ஆனால் மக்களால்  மத்திய வங்கியின் திருடன் என்றும், ஈஸ்டர் தின  தாக்குதல்தாரிகளின் பங்காளி என்றும் குற்றஞ்சாட்டப்படுபவர்கள்  இன்று  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் விதமாக தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒன்றாக  இருக்கையில் எவ்வாறு மக்களின் அபிப்ராயத்திற்கு எதிராக ஆதரவு  வழங்குவது. 

அதன் காரணாமகவே  இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்  கலந்துக் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின்  அடிப்படை  கொள்கைகளை இன்று  எவரும் பின்பற்றவில்லை. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆரம்ப  காலத்தில் இருந்து கட்சியின்  கொள்கையினை  பின்பற்றவில்லை. 

இனியொரு போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக  செயற்பட மாட்டேன். கட்சியின் கொள்கை  முறையாக ஒருகாலத்தில்  பின்பற்றப்படுமாயின்  அப்போது  கட்சி தொடர்பில் மீள்பரிசீலனை செய்வேன் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46