(ப.பன்னீர்செல்வம்)
படையினரை அகௌரவப்படுத்திய கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து படையினரை வெளியேற்றும் நடவடிக்கையின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமே இதுவாகும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டது.
இந்த விடயம் தொடர்பாக தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் படையினரிடம் நடந்து கொண்ட விதம் கீழ்த்தனமானதாகும். பகிரங்கமாக உயர் படை அதிகாரிகளை அவமதித்ததுக்கு இவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு இவ் விடயத்தில் அமைதியாகவுள்ளது.
வடக்கு, கிழக்கில் படையினரை அடிமைப்படுத்துவதும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும் நிகழ்ச்சி நிரலை விக்கினேஸ்வரன், அஹமட் நசீர், சிவாஜிலிங்கம் போன்றோர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடமளிக்க முடியாது.
எனவே எதிர்காலத்தில் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM