(இரா.செல்வராஜா)

சீனாவில் இருந்து விரைவில் எட்டு ரயில் எஞ்ஜின்கள் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, இந்தியாவில் இருந்து ஏற்கனவே ஆறு ரயில் என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரயில் என்ஜின் தற்போது கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் தேனுவர மெனிக்கே என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள உள்ள ஆறு ரயில் என்ஜின்களும் புதிய சேவைகளை ஆரம்பிக்க உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.