மர்மமான முறையில் ஆட்டமிழந்த ஆப்கான் வீரர்

Published By: Vishnu

07 Nov, 2019 | 05:08 PM
image

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் இக்ரம் அலிகில் மர்மமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலும் மூன்று ஒருநாள், மூன்று இருபதுக்கு - 20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவதாக ஆரம்பித்துள்ள இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி நேற்றைய தினம் லக்னோவில் இடம்பெற்றது.

பேட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் 194 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது, இதன் பின்னர் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 46.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

இப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும்போது சஸாய், ஜாவேத் அஹமட் ஆகியோர் ஓட்ட எண்ணிக்கை 15 ஆக இருக்கும்போது ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ரஹ்மத் ஷா (61), இக்ரம் அலிகில் (58) ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 20 ஒவர்களில் 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

இதன்போது 62 பந்துகளில் 6 நான்கு ஓட்டங்கள் ஒரு சிக்ஸர்களுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இக்ரம் அலிகில் விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார்.

17 பந்துகளில் 4 என்று மந்தமாகத் தொடங்கிய இக்ரம் 47 பந்துகளில் அரைசதம் கண்டார். மறுமுணையில் ரஹ்மத் ஷா அரைசதம் அடித்த அந்தப் பந்தில்தான் இக்ரம் அலிகில் மர்மமான முறையில் ரன் அவுட் ஆனார். 

இக்ரம் முதலில் கிரீசிற்குள் தன் மட்டையை நன்றாக ஊன்றினார், ஆனால் உடனடியாக எடுத்து விட்டுத் திரும்பி ரஹ்மத் ஷா-வை அவரது அரைசதத்திற்காக வாழ்த்து தெரிவிக்க கிரீசை விட்டு வெளியே வந்தார், ஆனால் பந்து ’டெட்’ ஆகவில்லை ‘லைவ்’ ஆகத்தான் இருந்தது என்பது குறித்து அவருக்கு நினைவில் இல்லை. 

பந்தை ஸ்டம்பில் அடித்த மேந்கிந்தியத்தீவுகள் அணி அப்பீல் செய்தனர். 2 ஆவது ஓட்டமும் எடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால் அவர் பெவிலியன் திரும்பித்தான் ஆகவேண்டும். விதிப்படி மே.இ.தீவுகள் அப்பீல் சரிதான். இக்ரம் அலிகில்தான் தவறிழைத்தார்.

இந்த அசந்தர்ப்ப ரன் அவுட், மே.இ.தீவுகளுக்கு சாதகமாக திருப்பு முனை ஏற்படுத்தியது அதே ஓவரில் ஸத்ரான் டக்கவுட் ஆக ஆப்கானிஸ்தான் அணி 194 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35