கினிகத்தேனையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவின் பாதுகாகவலர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும்  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றிரவு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தை கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில் தடுத்த கும்பல் ஒன்றை அங்கிருந்து விரட்டுவதற்காக அவரின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன்போது இருவர் படுகாயமடைந்து, தெலிகம வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தை அடுத்து அப் பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது  கினிகத்ஹேன மற்றும் நாவலப்பிட்டிபொலிசார் அந்த இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

பாதுகாப்பது உத்தியோத்தர்களின் இரண்டு துப்பாக்கிகளும் மூன்று வெற்று தோட்டாக்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு எதிர் வரும் 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

குறித்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.