(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழ் தேசிய ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமலே எதிர்க்கட்சி மீண்டும் அவர்களின் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தெற்கு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இவர்களின் கோரிக்கையை நிராகரித்ததுபோல் இம்முறையும் தோற்கடிப்பார்கள் என்றும் கூறினார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நிபந்தனை இன்றியே சஜித் பிரேதமதாசவுக்கு ஆதரவளிக்க முன் வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பாராளுமன்றத்தில் ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களையோ, இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களையோ தெரிவித்ததில்லை. அத்துடன் அவர்தான் வடக்கில் தேசிய கொடியை உயர்த்தி அனைவரும் இலங்கையர்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தார். 

ஆனால் ஈழம் கொடியை வடக்கில் உயர்த்திய வரதராஜ பெருமாள் இன்று கோத்தாபய ராஜபக்ஷ்வுடனே இருக்கின்றார். அதேபோன்று சஹ்ரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட ஹிஸ்புல்லாவும் கோத்தாபய ராஜபக்ஷ்வுடனே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.