(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வவுனியா மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இடை நிறுத்தப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கான "கிரீடா சக்தி" நிதியுதவித்திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுத்துறை ஒழுங்குவிதிகள் தொடர்பான சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை வலியுறுத்திய சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விளையாட்டு வீரர்கள்,விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு கிரீடா சக்தி நிதிஉதவித் திட்டம் மூலம் முறையே 1500 ரூபா,7500 ரூபா மாதமொன்றுக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் இது வவுனியா மாவட்டத்தில் கடந்த 4 வருடங்களாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே கிரீடா சக்தி நிதி உதவித்திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்துடன் ஓமந்தையில் அமைக்கப்பட்டு வந்த விளையாட்டு அரங்கு பணிகள் நிதியன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதே போன்று கிளிநொச்சி, மன்னாரிலும் நான்கு விளையாட்டரங்குப்பணிகள் நிதியின்றி இடை நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஒப்பந்தக்காரர்கள் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்க முடியாது சிரமப்படுகின்றனர்.எனவே இவற்றுக்கான நிதிகள் உடனடியாக வழங்கப்படவேண்டும். வடக்கு,கிழக்கு விளையாட்டுவீரர்கள் தேசியமட்ட போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக்கள் வழங்கப்படுவதுடன் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படவேண்டும். அத்துடன் சுகததாசா விளையாட்டரங்கு போல் மாவட்டத்துக்கொரு விளையாட்டரங்கு அமைக்கப்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM