எமது காலம் - வரலாற்றின் ஒரு நேரடி அனுபவம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் அருங்காட்சிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.

கடந்த முதலாம் திகதி வேம்படி வீதியிலுள்ள ரிம்மர் மண்டபத்தில் ஆரம்பமான இக் கண்காட்சிக்கு அதிகளவான மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். 

இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள், பல்கலைகழக மாணவர்கள் எனப் பலர் சென்று பார்வையிடுகின்றனர்.

இந் நிலையில் இக் கண்காட்சி மூலம் கடந்த 70 ஆண்டுகால இலங்கையின் வரலாற்றை புரட்டிப்பார்க்க கூடியதாக இருந்ததாகவும் நாட்டின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்ததாகவும் கண்காட்சியை பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.

இலவசக் கண்காட்சியாக நடத்தப்படுகின்ற இக் கண்காட்சி எதிர்வரும் 10ஆம் வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.