ஊட­கங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் எதி­ர­ணி­யினர்: ஐக்கிய தேசியக் கட்சி சாடல்..!

Published By: J.G.Stephan

07 Nov, 2019 | 02:47 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் 2015ஆம் ஆண்­டுக்கு முன்னர் ஊடக நிறு­வ­னங்­களும், ஊட­க­வி­ய­லா­ளர்­களும் எவ்­வாறு நடத்­தப்­பட்­டார்கள் என்­பதை அனை­வரும் அறிவர். பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். தாக்­கப்­பட்­டனர். காணா­ம­லாக்­கப்­பட்­டனர். அதே­போன்று ஊட­க ­நி­று­வ­னங்­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்ட, தாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளையும் கடந்த காலத்தில் பார்த்­தி­ருக்­கிறோம். தற்­போது மீண்டும் அத்­த­கை­ய­தொரு கலா­சா­ரத்தை கோத்­த­பாய ராஜ­பக் ஷ தரப்பு ஏற்­ப­டுத்­து­வதை காண­மு­டி­கின்­றது. எதி­ர­ணி­யி­னரால் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­ப­டு­வ­துடன், அழுத்­தங்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்­ஷன ராஜ­க­ருணா தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று புதன்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும்  குறிப்­பி­டு­கையில்,

அண்­மைக்­கா­ல­மாக பெரும் சர்ச்­சைக்கு உள்­ளா­கி­யி­ருக்கும் மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்கை ஜனா­தி­பதித்தேர்­த­லுக்கு முன்­ப­தாகக் கைச்­சாத்­தி­டப்­ப­டாது என நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளான சஜித் பிரே­ம­தாச மற்றும் கோத்­த­பாய ராஜபக் ஷ ஆகியோர் கடிதம் மூலம் உறுதி வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். எனினும் இவ்­வி­ரு­வ­ரி­னதும் கடி­தத்தின் உள்­ள­டக்­கத்தில் காணப்­படும் வேறு­பா­டுகள் அவ­தா­னத்­துக்­கு­ரி­ய­வை­யாகும்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் கடி­தத்தில், வெளி­நாட்டு ஒப்­பந்­தங்கள் குறிப்­பாக மிலே­னியம் சலென்ஞ் கோப்­ப­ரேஷன் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வது தொடர்பில், ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வ­டைந்த பின்னர் மகா­நா­யக்க தேரர்கள் உள்­ளிட்ட மத­கு­ரு­மா­ரு­டனும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே தீர்­மா­னிக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

ஆனால் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ அத்­த­கைய உறு­தி­யான கருத்து எத­னையும் தெரி­விக்­காத அதே­வேளை, அவர் ஒரு அமெ­ரிக்கப் பிரஜை என்­பதால் அவ­ரு­டைய கருத்­துக்­களை முழு­மை­யாக நம்ப முடி­யாத நிலையும் உள்­ளது.

அடுத்­த­தாக கடந்த 2015ஆம் ஆண்­டுக்கு முன்னர் வரை நாட்டில் ஊடக நிறு­வ­னங்­களும், ஊட­க­வி­ய­லா­ளர்­களும் எவ்­வாறு நடத்­தப்­பட்­டார்கள் என்­பது அனை­வரும் அறிந்த விட­ய­மாகும். ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­கி­ர­ம­துங்க கொல்­லப்­பட்டார். பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­ம­லாக்­கப்­பட்­ட­துடன், அவ­ரு­டைய மனைவி இன்­னமும் நீதி­கோரி போரா­டு­கின்றார். மேலும் பல ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டனர். தாக்­கப்­பட்­டனர். காணா­ம­லாக்­கப்­பட்­டனர். அதே­போன்று ஊட­க­நி­று­வ­னங்­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்ட, தாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளையும் கடந்த காலத்தில் பார்த்­தி­ருக்­கிறோம்.

 தற்­போது மீண்டும் அத்­த­கை­ய­தொரு கலா­சா­ரத்தை கோத்­த­பாய ராஜ­பக் ஷ தரப்பு ஏற்­ப­டுத்­து­வதை காண­மு­டி­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் நடத்­தப்­பட்ட அனைத்து கருத்­துக்­க­ணிப்­புக்­க­ளிலும் எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவே முன்­நிலை வகிக்­கின்றார். எனவே தமது தோல்­வியை அறிந்­து­கொண்ட எதி­ர­ணி­யினர் தற்­போது ஊட­கங்­களை அச்­சு­றுத்­தவும், அவற்­றுக்கு அழுத்தம் வழங்­கவும் ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள். இவற்­றி­லி­ருந்து மஹிந்த ராஜ­பக் ஷ குடும்பம் கடந்த காலத்­தி­லி­ருந்து எவ்­வித பாடமும் கற்­றுக்­கொள்­ள­வில்லை என்­ப­தையும், அவர்கள் சிறிதும் மாற­வில்லை என்­ப­தையும் உண­ர­மு­டி­கி­றது. மஹிந்த தரப்­பினால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட 52 நாட்கள் அரசியல் நெருக்கடியின் போது ஊடகங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பதே எதிரணியின் செயற்பாடுகளுக்கு சிறந்த உதாரணமாகும். அரச ஊடகங்களின் பிரதானிகள் மாற்றப்பட்டார்கள்.

செய்திகளை வெளியிடுவது தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. எனவே கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை அனை வரும் ஒன்றிணைந்து பாதுகாத்துக் கொள் வது அவசியமாகும். அதற்கேற்றவாறான பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38