எதிர்வரும் 15 ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள டி-10 என்ற 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த 15 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

லசித் மலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் நிரோஷன் திக்வெல்ல, செஹான் ஜெயசூரிய, தசூன் சானக்க, வனிந்து  ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ, மலிந்த புஷ்பகுமார, துஷ்மந்த சமீர மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் புதுகங்களான கெவின் கோத்தேகொட, பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பாமாகும் இத் தொடரானது 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.