இலங்கை மகளிர் றக்பி அணி நேற்று சீனாவுக்கு பயணமாகியுள்ளது. அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆசிய மகளிர் றக்பி போட்டித் தொடரின் இலங்கை மகளிர் றக்பி அணி பங்கேற்கவுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தகுதிகாண் போட்டி இந்தவார இறுதிப்பகுதியில் சீனாவின் குவென்சூ நகரில் இடம்பெறவுள்ளது. 

A பிரிவின் கீழ் போட்டியில் இலங்கை மகளிர் றக்பி அணியானது சீனா, ஹொங்கொங், தென்கொரியா ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.

தாய்லாந்து, சிங்கப்பூர், கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் B பிரிவின் கீழ் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.