அறிமுக இயக்குனர் ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் தயாராகும் ‘Dr 56’ என்ற படத்தில் நடிகை பிரியாமணி புலனாய்வு அதிகாரியாக நடிக்கிறார்.

‘பருத்திவீரன்’ பட புகழ் நடிகை பிரியாமணி, திருமணத்திற்குப் பிறகு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம் ‘Dr 56’. இப்படத்தில் புதுமுக நடிகர் பிரவீன் ரெட்டி கதையின் நாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் புலனாய்வு பொலிஸ் அதிகாரியாக நடிகை பிரியாமணி நடிக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

இதுகுறித்து அவர் பேசுகையில்,“ அறிமுக இயக்குனர் ராஜேஷ் மற்றும் கதையின் நாயகன் பிரவீன் அவர்களும் எம்மை சந்தித்து, இப்படத்தின் கதையை கூறினார்கள். அதில் என் கதாபாத்திரம் புலனாய்வு பொலிஸ் அதிகாரியாக மிக முக்கிய கதாப்பாத்திரமாக இருந்ததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

திருமணத்திற்கு பிறகு ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும், இதன் திரைக்கதை என்னை ஈர்த்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் படபிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.’ என்றார். 

இதனிடையே நடிகை பிரியாமணி நடிப்பில் 2012ஆம் ஆண்டில் தமிழில் ‘சாருலதா’ என்ற படம் கடைசியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.