பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நல்ல பாம்புக்கு, மயக்க மருந்து செலுத்தி அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் ஒன்று மதுரையில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதியில், உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் நல்ல பாம்பு ஒன்று நகர்ந்து செல்ல முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், திருநகரில் உள்ள ஊர்வன என்ற தொண்டு அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த ஊர்வன அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள், பாம்பை மீட்டு மதுரை தல்லாகுளத்தில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, வைத்திய குழுவினர் அந்த பாம்பை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். அறுவைச் சிகிச்சை செய்தால்தான் பாம்பு உயிர் பிழைக்கும் என்ற நிலை இருந்ததால், உடனடியாக அதற்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு 2 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறிய அந்த பாம்பு, 'நன்றாக ஊர்ந்து செல்கிறதா..?' என பரிசோதிக்கப்பட்டது. அப்போது, ஆட்களை பார்த்ததும் அது சீறத் தொடங்கியது. பாம்பு தனது இயல்பான குணத்தை வெளிப்படுத்தியதை உறுதி செய்த கால்நடை வைத்தியர்கள், அந்த பாம்பை மீண்டும் ஊர்வன அமைப்பினரிடம் கொடுத்தனர்.
அவர்கள் அந்த பாம்பை, மதுரை சரக வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகள், நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காட்டுப் பகுதியில் அந்த பாம்பை விட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM