ஈறுகளை பொலிவாக்கும் நவீன சிகிச்சை

Published By: Daya

07 Nov, 2019 | 01:45 PM
image

ஒவ்வொரு பெண்ணின் அழகும், அவரது புன்னகையில் தான் இருக்கிறது என்பார்கள். ஒவ்வொரு புன்னகையின் வலிமையும், அதன் ஈறுகளில் தான் இருக்கிறது என்பார்கள். அத்தகைய ஈறுகள் பொலிவாக இருப்பதற்கு Laser Gingivectomy என்ற நவீன சிகிச்சை ஒன்று அறிமுகமாகி இருக்கிறது.

எம்மில் பலருக்கு சிரிக்கும்போது பற்களை விட அவர்களின் ஈறுகள் அதிகமாக தெரியும். சிலருக்கு பற்களின் விகாரமான வளர்ச்சியின் காரணமாக ஈறுகள் சமச்சீரற்ற நிலையில் தோற்றம் தரும். சிலருக்கு ஈறுகளில் காரணமே இல்லாமல் இரத்தக் கசிவு ஏற்படும். வேறு சிலருக்கு ஈறுகளின் ஏற்படும் தொற்றின் காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படக்கூடும். இவற்றிற்கெல்லாம்  Laser Gingivectomy என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகி. பலனளித்து வருகிறது.

சிலருக்கு பற்கள் வளரும் பொழுது காரணம் சொல்ல முடியாத சூழலில் இயல்பான அளவைவிட கூடுதலாக வளர்ச்சி அடைந்துவிடும். பற்களை சுத்தம் செய்வதற்கு டூத் பிரஷ் இருப்பதுபோல், ஈறுகளை பிரத்யேகமாக சுத்தம் செய்வதற்கு எந்த வைத்திய நடைமுறையும் இல்லை என்பதால், ஈறுகளின் ஆரோக்கியம் நாளடைவில் பாதிக்கப்படுகிறது. அவற்றை சுத்தம் செய்வது கடினம். இதன் காரணமாக ஈறுகளில் வீக்கம் ஏற்படும். வலி ஏற்படும். ரத்தக் கசிவு உண்டாவதும் நிகழ்கிறது. பல தருணங்களில் வாய் துர்நாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணமாகி விடுகிறது. இதனை சீராக்க தற்பொழுது லேசர் வடிவிலான ஜின்ஜைக்டமி என்ற சிகிச்சை அறிமுகமாகி பலனளித்து வருகிறது.

இதன்போது ஈறுகளை சரியான அளவில், சரியான வடிவத்திற்கு சீரமைக்க முடிகிறது. அத்துடன் சத்திர சிகிச்சையோ, ஊசிகளையோ பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. அதனால் வலி இல்லை. இத்தகைய சிகிச்சை உங்களது ஈறுகளை சீராக்குவதுடன், உங்களது புன்னகையையும் பொலிவாக்குகிறது. அத்துடன் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29